››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“கொழும்பு வான் ஆய்வரங்கு” வெற்றிகரமாக நிறைவு

“கொழும்பு வான் ஆய்வரங்கு” வெற்றிகரமாக நிறைவு

[2017/10/14]

இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” கொழும்பில் வெள்ளியன்று (ஒக்டோபர், 13) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. பயனுள்ள ஆய்வரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்ற இரு நாட்களைக் கொண்ட இம் மாநாடு அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

“வான்பலத்தின் மூலம் சமச்சீரற்ற சவால்களை எதிர்கொள்ளுதல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இம்மாநாடு ஆறு அமர்வுகளாக இடம்பெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 24 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அடங்கலாக பல்வேறு துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அதேவேளை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தலைமை உரையாற்றியாமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்