››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சி அங்குரார்ப்பணம்

'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சி அங்குரார்ப்பணம்

[2017/10/16]

இலங்கை – இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைந்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி-2017’புனேயில் அமைந்துள்ள மரத காலாட்படை படைப்பிரிவின் அணிவகுப்பு மைதானத்தில் வெள்ளியன்று (ஒக்டோபர், 13) வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிகழ்வின் போது இலங்கை இந்திய நாடுகளினது கொடிகளை ஏந்திய வண்ணம் இந்திய இலங்கை இராணுவத்தினரின் அணிவகுப்புகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இந்திய இராணுவத்தின் 330வது காலாட்படை படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் அலொக் சந்திர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் அவர், இலங்கை இராணுவத்தின் கட்டளை வகிக்கும் தளபதியாக பிரிகேடியர் அஜித் பல்லேவல அவர்களுடன் இணைந்து இப்பயிற்சிநெறியின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகிறார்.

இந்த பயிற்சி ஆரம்பத்தின் போது இலங்கை , இந்திய நாடுகளின் கொடிகளை பரக்கவிட்டப்பட்ட படி ஹெலிக்கொப்டர்களில் படையினர் உலா வந்தனர். தொடர்ந்து இந்திய இராணுவ குருகாஷ் படையினரால் குக்ரி நடனம் இந்த பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது பின்னர் இலங்கை இராணுவத்தினால் அரங்கேற்றப்பட்ட வெஷ் கண்டி நடனம் இடம்பெற்றது. இறுதியாக இந்திய இராணுவத்தின் கண்கவர் மேலத்தேய பேன்ட் வாத்தியத்துடன் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்