››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ்ப்பாணத்தில் விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு

[2017/10/17]

யாழ் மாவட்ட இராணுவ பாதுகாப்பு படையினர் இப்பிராந்தியத்தில் கொடிய நோயான டெங்கு நோய் பரவுவதனை தடுக்கும் வகையில் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இத்திட்டமானது, சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு படைகளின் பிரதாணியின் அலுவலகத்தினால் அண்மையில் (ஒக்டோபர், 16) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், இராணுவத்தினர் 109 பேர், கடற்படை 45 பேர், மற்றும் காவற்துறையினர் 86 பேர் உட்பட 240 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு கொடிய டெங்கு நோய் பரவுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் 6,400 க்கும் அதிகமான வளாகங்கள் பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்வினை முன்னிட்டு அரசினால் நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்திற்கு முப்படை வீரர்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன், இராணுவம் மற்றும் கடற்படையினர் ஒன்றினைந்து டெங்கு நோயாளர்களின் இரத்த மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்யும் வகையில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றினை நீர்கொழும்பு வைத்தியசாலையில் நிறுவியுள்ளனர். அத்துடன் அவர்கள் டெங்கு நோயாளர்களை கண்காணிக்கும் வகையில் மேலதிகமாக தற்காலிக வாட்டுக்களும் குறித்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்