››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களில் இராணுவத்தினரும் இணைவு


தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களில் இராணுவத்தினரும் இணைவு

[2017/10/21]

நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தினையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வடக்கில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வின்போது மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்தினர் உதவி ஒத்தாசைகள் வழங்கினர்.

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படையணியின் 651,652 மற்றும் 653 படைப் பிரிவுகளைச் சேர்ந்த படையினரால் தீபாவெளிப் பண்டிகையை சிறப்பிக்கும் நோக்கில் கடந்த புதன் கிழமை (18) ஆளங்குளம், துனுக்காய்ப் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கான ஆதரவு வழங்கப்பட்டது.

இதன் போது படையினர் கோவில் வளாகங்களை சுத்திகரித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மரக்கறி உணவு வகைகளையும் குளிர் பாணங்களையும் வழங்கி வைத்தனர்.

இதேவேளை, முல்லைத் தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைப் பிரிவினர் இந்து பக்தர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அத்துடன் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த நூரிற்கும் மேற்பட்ட படையினர் ஒட்டுசுட்டானிலுள்ள சிவன் கோவிலின் சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டதுடன் பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்ட பகதர்களுக்கு குளிர்பாணம் உள்ளிட்ட சிற்றுண்டிகளையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்