››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

2017ஆம் ஆண்டுக்கான 11வது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பரில்

2017ஆம் ஆண்டுக்கான 11வது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பரில்

[2017/11/02]

இம்மாதம் (நவம்பர்) 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 2017ஆம் ஆண்டுக்கான 11ஆவது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி திருகோணமலையின் சீனக்குடாவிலுள்ள விமானப்படை ஈகிள்ஸ் கோல்ப் லிங்ஸ் மைதானத்தில் இடம்பெற உள்ளதாக இராணுவ ஊடக நிலையத்தில் இன்று (நவம்பர், 02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டி பாதுகாப்பு படைகளின் பிரதாணி எட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற இருப்பதுடன் இதுவே இலங்கையில் இடம்பெறும் முதல் சர்வதேச கோல்ப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்காக, 12 நாடுகளைச் சேர்ந்த 84 விளையாட்டு வீரர்கள் போட்டியிட உள்ளதுடன் இலங்கைக் குழுவை பிரதிநிதித்துவபடுத்தி 06 விளையாட்டு வீரர்கள் மற்றும் 03 வீராங்கனைகள் போட்டியிட உள்ளனர். இதேவேளை, முதல் தடவை பெண் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இப்பபோட்டியின் இறுதிநிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலைய பணிப்பாளர், மேஜர் ஜெனரல் றொஷான் செனவிரத்ன மற்றும் கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதித் தலைவர், எயர் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பத்திரண ஆகியோரும் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்