››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தின் பரா விளையாட்டுப் போட்டிகள் - 2017 இன்றுடன் நிறைவு

இராணுவத்தின் பரா விளையாட்டுப் போட்டிகள் - 2017 இன்றுடன் நிறைவு

[2017/11/24]

ஹோமாகம தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கை இராணுவத்தின் 20ஆவது பரா விளையாட்டுப் போட்டி - 2017 இன்றுடன் (நவம்பர், 24) அதன் இறுதிநாளை அடைந்துள்ளது. இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டி நிகழ்வில் சுமார் 450க்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், இவ்வருட பரா விளையாட்டுப் போட்டியில் கொரிய நாட்டைசேர்ந்த நான்கு புகழ்பெற்ற மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான நடவடிக்கையின்போது தமது கை, கால்களை இழந்து அங்கவீனமுற்ற யுத்த வீரர்களின் தடகள மற்றும் விளையாட்டு திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சிறந்த தளமாக “பரா விளையாட்டுப் போட்டிகள்” காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், 50 க்கு மேற்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சுமார் 200 பதக்கங்களும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதேவேளை, 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “இலங்கை இராணுவத்தின் அங்கவீனனர்கள் விளையாட்டுப் போட்டி” ஆனது 2010 ஆம் ஆண்டு “இலங்கை இராணுவத்தின் பரா விளையாட்டுப் போட்டிகள்” என பெயர் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை நிறைவு பெறவுள்ள குறித்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்