››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

2017ஆம் ஆண்டுக்கான 20ஆவது இராணுவ பரா விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

2017ஆம் ஆண்டுக்கான 20ஆவது இராணுவ பரா விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2017/11/25]

ஹோமாகம தியகம விளையாட்டரங்கில் கோலாகலமாக நடைபெற்றுவந்த 2017ஆம் ஆண்டுக்கான 20ஆவது இராணுவ பரா விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா நேற்று மாலையுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்விற்கு வருகைதந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வரவேற்றார்

இங்கு இடம்பெற்ற அனைத்து தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளில் இலங்கை இலகு காலாட்படைப்பிரிவின் குழுவினர் சிறந்த வெற்றியைப் பெற்று சாம்பியன் ஆக தெரிவாகியுள்ளனர். இதன்போது, செயலாளர் அவர்கள் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிச்சின்னங்களை வழங்கி வைத்ததுடன், இந்நிகழ்வினை நிறைவு செய்யும் வகையில் இவ்வருட நிகழ்வின் இறுதி அறிவிப்பினையும் வாசித்தார்.

இங்கு சக்கர நாற்காலி வலைப்பந்து, சைக்கில் ஓட்டப் போட்டிகள், சக்கர நாற்காலி மரதன் ஓட்டப் போட்டிகள், கரப்பந்தாட்டம், கைப் பந்து, மேசைப் பந்து, கால் பந்து நீச்சல் போட்டிகள், பெட்மிட்டன், பாரம் துக்கும் போட்டிகள், குண்டெரிதல், கிரிக்கெட் மற்றும் ஏயார் ரைபல் துப்பாக்கிச்சூட்டுப் போட்டிகள் என்பன இடம் பெற்றதுடன், இப்போட்டிகளில் கொரிய நாட்டைசேர்ந்த நான்கு மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கொரிய தூதுவர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்