››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்ட "சயுறால" நாடு திரும்பியது

சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்ட "சயுறல" நாடு திரும்பியது

[2017/11/29]

இலங்கை கடற்படை கப்பல் "சயுறல" தனது முதல் வெளிநாட்டு கடற்பயணத்தை நிறைவு செய்து நேற்று (நவம்பர், 28) தாயகம் திரும்பியுள்ளது. இவ்வருடம் (2017) ஆகஸ்ட் மாதம் கப்பற்படையில் இணைந்துகொண்ட குறித்த கப்பல், தாய்லாந்தில் இடம்பெற்ற 2017ஆம் ஆண்டின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்க சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருகோனமலை துறைமுகத்திலிருந்து அண்மையில் (நவம்பர், 09) நாட்டை விட்டு புறபட்டுச்சென்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கப்பற்படை கட்டளை அதிகாரி, ரியர் எட்மிரல் கபில சமரவீர அவர்கள் தலைமையில் 18 அதிகாரிகள் உட்பட 127 கடற்படை சிப்பந்திகளுடன் புறப்பட்டுச் சென்றதுடன், இலங்கை கடற்படை இணைந்துகொண்ட நீண்ட கால (21நாட்கள் கொண்ட) வெளிநாட்டு பயணமாக இது காணப்படுகிறது

தாய்லாந்து பட்டயாவில் இம்மாதம் (நவம்பர்) 20ஆம் திகதி அந்நாட்டு பிரதமர் முன்னிலையில் குறித்த இச்சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இன் நிகழ்வு தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கு இடம்பெற்ற கப்பற்படை மீளாய்வு மற்றும் அது தொடர்பான பயிற்சிகளில் 19 தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 26 கடற்படை கப்பல்கள் பங்கேற்றுள்ளன.

     

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்