››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபட்ட இலங்கை பாதுகாப்பு படையிருக்கு ஐ. நா. பதக்கங்கள்

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபட்ட இலங்கை பாதுகாப்பு படையிருக்கு ஐ. நா. பதக்கங்கள்

[2017/11/29]

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபடும் ஐ. நா. வின் அமைதிகாப்பு படையில் அங்கத்துவம் வகிக்கும் 16 பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் 50 பாதுகாப்பு படை வீரர்கள், இரண்டாம் நிலை மருத்துவமனையில் 6 மாத கால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக குறித்த படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கம் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளியன்று (நவம்பர், 24) தென் சூடானில் இடம்பெற்றது.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ தளபதியின் பிரதிநிதியாக இராணுவ மருத்துவ சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.பி. சுமனபால, ஐ.நாவின் அழைப்பினை ஏற்று பிரதம அதிதியாக இந்நிகழ்வில் பங்கேற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிகழ்வில் கிழக்கு கட்டளை தளபதி, கள நிருவாக அதிகாரி, அனைத்து குழுக்களுக்குமான கட்டளை தளபதிகள் மற்றும் ஏனைய மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்