››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் புதிய வீடு கையளிப்பு

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் புதிய வீடு கையளிப்பு

[2017/11/29]

பல நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சினது முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு இன்று (நவம்பர், 29) கையளிக்கப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வீடு கையளிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

2014ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்டு வயது சிறுமியின் தந்தையான டீ எல் லங்காதிலக என்பவருக்கு இப்புதியவீடு அன்பளிப்பு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த வீடு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக வீட்டின் நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் உரிய குடும்பத்திற்க்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள், வீடு அவசியமான குடும்பத்திற்கு உதவுவதில் பங்களித்த ஜனாதிபதிக்கும் நன்கொடையாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சுஆற்றிவரும் சமூக சேவை முயற்சிகள் பற்றி குறிப்பிடுகையில், போர் வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், வீடமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் யுத்த வீரர்களின் வாழ்விடத் தேவைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பேச்சுவார்த்தையின் மூலம் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும் இதுபோன்ற சமூகநல திட்டங்களில் பங்கேற்க தனியார் துறையினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு செயலாளர் தனது உரையில் பாதுகாப்பு அமைச்சு தனது சேவைகளை பாதுகாப்புடன் மட்டும் மட்டுப்படுத்தாமல், மக்களின் நலன்களை மேம்படுத்தும் சமூக நலத்திட்டங்களிலும் தனது சேவையை வழங்கி வருகின்றது. மேலும் அவர், இத்திட்டத்திற்கு மனமுவந்து தமது பங்களிப்பினை வழங்கிய தனியார்துறை அனுசரணையாளர்களுக்கு தமது நன்றியினை தெரிவித்த அவர் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் இதுபோன்ற பல திட்டங்களை அரசுடன் இணைந்து மேற்கொள்வதை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் இத்திட்டத்தில் காத்திரமான பங்களிப்பு வழங்கிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் தமது நநன்றியினை தெரிவித்தார்.

குறித்த வீட்டின் நிர்மாணப்பணிகளுக்கான நிதியுதவி AIA காப்புறுதி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அதேவளை தொழிநுட்பம் மற்றும் உடல் ஊழிய உதவி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

3 படுக்கையறைகளைக்கொண்ட இல்லத்தில் முறையான சுகாதார வசதிகள் மற்றும் பொதுவான பயன்பாடுகள் உட்பட அனைத்து வசதிகளும் அடங்குகின்றன. மேலும் இவ்வீடு ரூ. 08 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு குடியிருப்பதற்கு தயாரான நிலையில் உள்ளது. தேசிய சேமிப்பு வங்கி மற்றும் தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகியவை இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான இடத்தில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குறித்த வீடு கையளிப்பின்போது போது, இரண்டு மகள்களின் தந்தையான டி.எல். லங்காதிலிகே, ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவரது நன்றியை தெரிவித்திருந்தார். புதிய வீடு இல; 116/79 டி, லேன் எண் 10, நிசிலிகம, போபிடியவில் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர, நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் திரு. சரத் சந்திரசிறி வித்தனா, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபிலா ஜெயம்பதி, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. சந்திரரத்ன பல்லேகம, மூத்த அமைச்சின் அதிகாரிகள், ஆதரவாளர்கள் மற்றும் சிரேஷ்ட அரச மற்றும் இராணுவ அதிகாரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2014 செப்டெம்பர் 17 ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட 8 வயது சிறுமி பூஜானி ஹசந்திவிசாரணையின் போது, சிறுமியை படுகொலை செய்யப்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

     
     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்