››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

[2017/11/30]

படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சிற்கு இன்று (நவம்பர்,30) விஜயம் செய்தனர்.

இவ்விஜயத்தின் போது, மேஜர் ஜெனரல் எம்.ஆர்.ஆர் தர்மசிறி தலைமையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவ அதிகாரிகள் மற்றும் பீடங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட நூற்று இருபது எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் வகிபாகம் மற்றும் இவ் ஸ்தாபனத்தின் கட்டமைப்பு தொடர்பாக அதிதிகளுக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர அவர்களும் கலந்து கொண்டார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்