››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு தொடர்பான சர்வதேச செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்

காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு தொடர்பான சர்வதேச செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்

[2017/11/30]

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு: தென் ஆசியவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான சவால்கள் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச செயலமர்வு இன்றைய தினம் (நவம்பர், 30 ) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

பத்தரமுல்ல சுகுருபாயவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. குறித்த இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சரத்குமார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இச் சர்வதேச செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.

ந்நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய செயலாளர் வைத்தியரத்ன அவர்கள் , நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய காலநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் இச்செயலமர்வின் தொனிப்பொருள் அமையப்பெற்றுள்ளதை கோடிட்டுக் காட்டினார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், தெற்காசிய நாடுகள் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் சிரமங்கள் என்பன மிக கடுமையானதாகும். அத்துடன் காலநிலை மாற்றம் மோதலுக்கு நேரடியான காரணியாகவும் அமைகின்றது. எவ்வாறாயினும், நிலம் மற்றும் வாழ்வாதார இழப்பு போன்ற விளைவுகளின் தாக்கம் உலக ஸ்திரமற்ற தன்மையையும் மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கும் திறனையும் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில், காலநிலை மாற்றமானது, அச்சுறுத்தல் பெருகுவதற்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மை என்பன உணவு மற்றும் நீர் ஆதாரங்களுடன் இணைந்துள்ளது. காலநிலை மாற்றம் வளங்களை ஒரு குறிப்பிடத்தக்க அழுத்தத்தை வழங்குகிறது.

இரு நாட்களைக் கொண்ட இச் சர்வதேச செயலமர்வினை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையமானது, தென் ஆசிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் கொன்ராட்-அடேநோஏர்-ஸ்டிப்டங் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்தது.

பாதுகாப்பு துறையின் வகிபாகத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் தெற்காசியாவில் தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கான காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வது இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாகும். மேலும், சார்க் பிராந்தியத்திற்குள் அறிவினை பரிமாற்றி கொள்வதற்கு பங்களிக்களிக்கும் வகையில் இச்செயலமர்வு இடம்பெருகிறது.

இந்த நிகழ்வுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்கள், வல்லுநர்கள், சிரேஷ்ட பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலர் உள்ளடங்குகின்றனர். இலங்கைக்கான ஜேர்மானிய தூதர் அதிமேதகு ஜார்ன் ரோட் அவர்களும் பேச்சாளர்களின் குழுவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், திரு. அசங்க அபேகுனசேகர, பிராந்திய செயற்திறன் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள், ஹாங்காங் SAR, கொன்ராட்- அடினோவர்-ஸ்டிஃப்டிங் இன் பணிப்பாளர், கலாநிதி. பீட்டர் ஹீஃபெலே, தென் ஆசிய கற்கை நிலையத்தின் பணிப்பாளர், கலாநிதி. நிஷால் பாண்டே ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்