››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில் இணைவு

கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில் இணைவு

[2017/12/03]

நாட்டில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையினரால் 12 இலகுரக படகுகளுடன் கூடிய 13 நிவாரணக் குழுக்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட தென், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடற்படையின் நிவாரண குழுக்கள் செயற்படுத்தப்பட்டன. தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஆறு நிவாரண குழுக்கள் மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்ட அதேவேளை மீதமுள்ள குழுக்கள் சபரகமுவ மாகாணத்தில் மனிதாபிமான உதவி வழங்கியது.

இந்த நடவடிக்கைகளின் போது, கடற்படை வீரர்களினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 155 க்கும் மேற்பட்டோர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். மேலும் நாடு எதிர்நோக்கியுள்ள கடுமையான காலநிலை நிலைமைகளின் போதும் இந்த கடற்படை குழுக்ககளின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்கின்றன.

மீட்பு நடவடிக்கைகள் தவிர, மரைன் கடற்படை அணிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகளில் சரிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காணப்பட்ட மரங்கள், மின்சார, தொலைபேசி கம்பங்கள் மற்றும் பாறைகள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர். நில்வளா ஆற்றின் தொடர்ச்சியான நீர்போக்கினை உறுதிப்படுத்தும் வகையில் அங்கும் கடற்படை சுழியோடிகள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்