››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் பொதுமக்கள் நலன்கருதி மேலும் காணி விடுவிப்ப

யாழ் பொதுமக்கள் நலன்கருதி மேலும் காணி விடுவிப்பு

[2017/12/02]

யாழில் மற்றுமொரு ஒரு தொகுதி காணி இலங்கை இராணுவத்தினரால் அண்மையில் (நவம்பர், 30) விடுவிக்கப்பட்டது. ஜே 244 வாசவிளான் கிராமசேவக பிரிவின் பாலாலி இராணுவ படைத்தலைமையகத்துக்கு அருகில் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் உத்தரியமாதா ஆலயம் ஆகியவற்றை கொண்டமைந்த அமைந்த சுமார் 29 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.

யாழ் வசுவிளான், ஒட்டம்பலம் பகுதியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது காணி விடுவிப்பு தொடர்பான உத்தியோக பூர்வ பத்திரங்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் தர்சன ஹெட்டியாராச்சி அவர்களினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வினை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம், சிறை சீர்திருத்தம், புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மதம் மத அலுவல்கள் அமைச்சு, யாழ் மாவட்ட செயலகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேசவாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்