››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

[2017/12/01]

சூறாவளி அனர்த்தத்தின்போது மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவத்தினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய, அண்மையில் (நவம்பர், 30) நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் சூறாவளி அனார்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய பணிகளில் சகோதர அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள், காவல்துறையினர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம், மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவற்றுடன் ஏனைய நிவாரண உதவி பணியாலல்ர்கள் ஒன்றிணைந்து கொழும்பு, கம்பஹா, பதுளை, இரத்தினபுரி, காலி, களுத்துறை, மொனராகலை, நுவரெலியா,

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவசர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இராணுவத்தினர் மண்சரிவு காரணமாக வீதிகளில் வீழ்ந்து வீதிப் போக்குவரத்துக்கு தடையாககாணப்பட்ட மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்