››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெளிநாட்டு தூதுவர்கள் வடக்கிற்கு விஜயம்

வெளிநாட்டு தூதுவர்கள் வடக்கிற்கு விஜயம்

[2017/12/04]

இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு டேவிட் மெக்கினோன் மற்றும் உயர் ஸ்தானிகராலய அரசியல், பொருளாதார ஆலோசகர் திருமதி. ஜெனிபர் ஹார்ட் ஆகியோர் அண்மையில் (நவம்பர், 30) யாழ் பாதுகாப்பு படைத் தலைலமையகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணதிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளையில் இப்படைத் தலைலமையகத்திற்கு விஜயம் செய்துள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை சந்தித்து மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் இராணுவத்தின் பொறுப்புகள் மற்றும் பொதுவான விடயங்கள் தொடர்பாகவும், சமூகத்துடன் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக ஒற்றுமை ஊடாக நல்லிணக்க செயற்பாடுகளை மேம்படுத்தல் தொடர்பாவும் இங்கு விஷேட கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முனேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்கள் கலந்துரையாடியான்ர்.

இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் திருமதி டோம் பேர்ன் அவர்களின் வடக்கிற்கான விஜயத்தின் போது அவர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 64 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்திற்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது அவர் 64 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அவர்களிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இப்பிரதேசத்தில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம், இன ஒற்றுமை மேம்படுத்துவதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலனோம்பல் விடயங்கள் மற்றும் பிரதேச பாதுகாப்பு தொடர்பாக பிரதி உயர் ஸ்தானிகருக்கு கட்டளைத் தளபதியினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்