››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

படைவீரர்களினால் முன்னெடுக்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

படைவீரர்களினால் முன்னெடுக்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

[2017/12/04]

நாட்டில் நிலவி வந்த சீரற்ற காலநிலை சீரானதாக மாற்றம் பெற்று வரும் இவ்வேளை நாடு முழுவதும் இராணுவத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றின் கீழுள்ள நூற்றுக்கணக்கான படைச்சிப்பாய்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை மாவட்டத்தில் நில்வலா ஆற்றில் கடுவ, மலிம்படவில் ஏற்பட்ட வெடிப்பினை திருத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதிகளில் கரையோர பகுதி உடைப்பெடுப்பதினை தடுக்கும் வகையல் மண்மூட்டைகளை அடுக்கி அப்பகுதியை பலப்படுத்தினர்.

கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களில் வீதிகளில் முறிந்து வீழ்ந்து கிடந்த மரங்கள், குப்பை கூளங்கள் என்பவற்றை துப்பரவு செய்யும் பணிகளில் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள படைவீரர்கள் ஏனைய அரச திணைக்களங்களுடன் இணைந்து ஈடுபட்டனர்.

மேலும், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்கள் கொழும்பு - பதுளை புகையிரத பாதையில் ஓஹியா மற்றும் தியத்தலாவ இரயில் நிலையங்களுக்கிடையிலான புகையிரத பாதைகளில் வீழ்ந்திருந்த மரங்ளை அகற்றி துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நீர் பம்பி இயந்திரத்தையும் நீர் வழங்கல் திணைக்களத்துடன் இணைந்து சீரான நிலைக்கு கொண்டு வந்தனர்.

களுத்தரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மின் இணைப்பினை மீள வழங்கும் வகையில் 10 படைவீரர்கள் இராணுவ குழுக்கள் மின்சார திணைக்களத்துடன் இணைந்து மின்சார புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்