››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பிரான்ஸ் கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

பிரான்ஸ் கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

[2017/12/05]

பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான “ஒவேர்க்னே” கடற்படை கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தார். குறித்த கப்பலுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை கப்பலின் கட்டளைத்தளபதி கேப்டன் சேவியர் ப்ரீடேல்அவர்கள் வரவேற்றார்.

இவ்விஜயத்தின் போது கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு உயர் கடற்படை மரியாதைகள் அளிக்கப்பட்டன. மேலும், குறித்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் இராஜாங்க அமைச்சர் மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி கேப்டன் ப்ரீடேல் ஆகியோரிடையே நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு ஜீன்-மரீன் சுச், பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.


பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ஒவேர்க்னே” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இம்மாதம் 3ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்