››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் மாலியிலிருந்து நாடு திரும்பினர்

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் மாலியிலிருந்து நாடு திரும்பினர்

[2017/12/05]

மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக சென்ற இலங்கை இராணுவத்தின் ஒரு தொகுதியினர் தமது 6 மாத கால பணியினை நிறைவு செய்ததன் பின்னர் இன்று (டிசம்பர், 05) நாடு திரும்பியுள்ளனர். இராணுவப் பொறியியலாளர் சேவைப் படையணியைச் சேர்ந்த 53 இராணுவ வீரர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலி நாட்டிற்கு சென்ற இலங்கை இராணுவப் பொறியியலாளர் சேவைப் படைப்பிரிவினர் இம்மாதம் (டிசெம்பர்) ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டின் அமைதி; காக்கும் நடவடிக்கைகளுக்கா விஜயம் செய்யவுள்ள இலங்கை இராணுவக் குழுவினருக்கு தேவையான தங்குமிட வசதிகள், மலசலகூட வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்துள்ளனர்.

200 இராணுவப்படை வீரர்ககளும் மற்றுமொரு ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக செல்லவுள்ளதுடன், அந்நாட்டின் தேவைகளின் முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டு இவர்கள் குழுக்களாக செல்லவுள்ளனர். மேலும், ஐக்கிய நாடுகளின் 7ஆவது பயிற்றுவிப்பில் சமாதான நடவடிக்கைகளுக்காக ஒரு வருட கால விஜயத்தை இவர்கள் டிசெம்பர் மாதம் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளவுள்ளனர். இக்குழுவில் இராணுவத்தின் 10 படை பிரிவுகளைச்சேர்ந்த 16 அதிகாரிகள் மற்றும் 184 இராணுவ வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்