››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மேல்மாகாண கனிஷ்ட மாணவர் சிப்பாய்களுக்கான பயிற்சி முகாம் – 2017 அடுத்த வாரம் ஆரம்பம்

மேல்மாகாண கனிஷ்ட மாணவர் சிப்பாய்களுக்கான பயிற்சி முகாம் – 2017 அடுத்த வாரம் ஆரம்பம்

[2017/12/06]

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி இம்மாதம் 12ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை மேல்மாகாண கனிஷ்ட மாணவர் சிப்பாய்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றினை நடாத்த உள்ளது. இந்நிகழ்வு, வெயாங்கொட சியான தேசிய கலவிக்கல்லூரியில் இடம்பெற உள்ளது.

குறித்த நிகழ்வு தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர அவர்கள் தலைமையில் இன்று (டிசம்பர், 06) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கான ஆரம்பகட்ட கனிஷ்ட மாணவர் சிப்பாய்களுக்கான பயிற்சி நிகழ்வுகளின் பரீட்சார்த்த நிகழ்வுகள் திருகோனமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் 189 மாணவர்கள் மற்றும் 52 மாணவிகள் உள்ளடங்கிய கடட் படையணியினர் கலந்துகொண்டனர். மேலும் அவ்வருட முடிவில் எட்டு கனிஷ்ட மாணவர்கள் படையணி மற்றும் இரண்டு கனிஷ்ட மாணவிகள் படையணிகளுக்கு மதிப்பீட்டு முகாம்களை தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியினால் நடாத்த முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பயிற்சிக்காக அரசமட்டும் தனியார் பாடசாலைகளிலிருந்து 12-14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயிற்சியளிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான பயிற்சியில் உடற்பயிற்சி, வரைபட வாசிப்பு, முதல் உதவி, றில் பயிற்சிகள், தந்திரோபாயங்கள், மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குதல் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி, சுய கட்டுப்பாடு மற்றும் கூட்டு முயற்சிகளுடன் செயற்படுவது தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏகேபி விக்ரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்