››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் தொடர்கிறது

கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் தொடர்கிறது

[2017/12/07]

இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் நடாத்தாப்படும் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவம் தொடர்பான எழு நாட்களைக் கொண்ட இப்பயிற்சி நடவடிக்கைகள் டிக்கோவிட்ட கடற்பரப்பில் நான்காவது நாளாகவும் இடம்பெறுகிறது. இப்பயிற்சி நடவடிக்கைகள் கடந்த திங்கள்கிழமை ஆரம்பமானதாகவும் இப்பயிற்சியின் நோக்கம் புதிதாக கொள்வனவு செய்யப்பட ஆழ்கடல் ரோந்துப் படகான எஸ்எல்சீஜி சுரக்ஸ கப்பலினை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தளமாகப் பயன்படுத்தி திறந்த கடற் பரப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு முகாமைத்துவத்தை சுய மதிப்பீடு செய்தலாகும் என கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பயிற்சியில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையுடன் இணைந்து இலங்கை கடற்படை சிப்பாய்களும் பங்குபற்றுகின்றனர். மேலும் இப்பயிற்சியில் இலங்கை விமாப்படையின் பெல் 212 உலங்குவானூர்தியும் பங்குபற்றுகின்றது. அத்துடன் கடலோர பாதுகாப்பு படைக் கப்பல் சுரக்ஸ, கரையோர ரோந்துப்படகுகள் உள்ளிட்ட பல படகுகள் இப்பயிற்சியில் பங்குபற்றுகின்றன. இந்நிகழ்வுகளில் தேசிய எண்ணெய் கசிவு அவசரகால திட்டம், சான்றுகள் சேகரிப்பு மற்றும் இரசாயனங்களின் பயன்பாடு ஆகியன தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக பல அமர்வுகள் நடத்தப்பட்டன.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, கப்டல்வள சூழல் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ரோகன பெரேரா, மேற்கு கடற்படை பிராந்திய கட்டளைத்தளபதிமற்றும் இலங்கை கடற்படை நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வினை பார்வையிட்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்