››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஈரானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஈரானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/12/07]

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு முஹம்மது சஈரி அமிராணி அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர்,07) இடம்பெற்றது.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க ஈரானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்