››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்புத் திட்டம்

பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்புத் திட்டம்

[2017/12/08]

பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் டெங்கு பெருகுவதை கட்டுப்படுத்தும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுவரும் இச்சமூக நலன்புரித்திட்டம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டதுடன் இணைந்தாக அவற்றுக்கு உதவும் வகையில் சுயாமாக முன்வந்து சிரமதான அடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் இந்நடவடிக்கைகளில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுபோன்ற சிரமதான அடிப்படையிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கிளிநொச்சி நகர பகுதியினை மையப்படுத்தி இடம்பெற்றது.

மேலும், இதுபோன்ற மற்றுமொரு நிகழ்வு கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள பாரதிபுரம் அம்மன் கோயில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அவற்றை இல்லாதொழிக்கும் பணிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்