››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ நினைவு தினப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ நினைவு தினப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2017/12/08]

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்றய தினம் (டிசம்பர், 08) ஏற்பாடு செய்யப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் வருடாந்த நினைவு தினப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இவ்வருடாந்த நினைவு தினப் பேருரை பத்தரமுல்ல, சுஹுருபாய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இங்கு "சமகால சூழலில் லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கோபெகடுவை அவர்களின் வாழ்க்கை" எனும் தலைப்பில் ஓய்வுபெற்ற ஜெனரல் கெர்ரி டி சில்வா அவர்களினால் நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது.

இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், பயங்கரவாதத்திற்கு எதிராக எமது நாடு அடைந்த வெற்றிக்கும், இந்நாட்டில் நாம் அனுபவிக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கும் தமது உயிர்களை தியாகம் செய்த அனைத்து போர் வீரர்களுமே காரணம் என செயலாளர் வைத்தியரத்ன தெரிவித்தார். இந் நினைவுப் பேருரை ஜெனரல் கொப்பேகடுவ மற்றும் அவருடன் மௌனித்த அனைத்து வீரர்களின் உயர் தியாகத்தை கௌரவப்படுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

மேலும் அவர், இந்த வருடாந்த மன்றத்தின் நோக்கம், மூலோபாய சிந்தனைகளை ஊக்குவித்தலும், எதிர்காலத்தில் இலங்கையின் மூலோபாய போக்குகளை வகைக்குறித்தலும் ஆகும். ஈழப் போர்களின் ஆரம்ப கட்டங்களில் மிக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட நாட்டின் நவீன வரலாற்றில் சிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவரும் சிறந்த மூலோபாயவாதியுமான ஜெனரல். கொப்பேகடுவ அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

இந் நினைவுப்பேருரைக்கு முன் மறைந்த ஜெனரல் தொடர்பான காணொளிக்காட்சி இடம்பெற்றதுடன் பின்னர் அவரின் உருவச்சிலைக்கு அவரது மனைவி திருமதி லலி கொப்பேகடுவ அவர்கள் மாலை அணிவித்தார். இந்நிகழ்வின் வரவேற்புரை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அபேகுணசேகர அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

1940 இல் பிறந்த ஜெனரல் கொப்பேகடுவ , கண்டி புனித திரித்துவ கல்லூரியில் தனது கல்வியை நிறைவு செய்தார். 1960 மே மாதம் இலங்கை இராணுவத்தில் ஒரு பயிலுனர் அதிகாரியாக இணைந்துகொண்ட அவர், தியத்தலாவ இராணுவ பயிற்சி மையத்தில் தனது அடிப்படை பயிற்சியை முடித்தார்.பின்னர் அவர் இங்கிலாந்தின் சந்துர்ஸ்ட் ராயல் மிலிட்டரி அகாடமியில் அதிகாரிக்கான மேலதிக பயிற்சியினைப் பெற்றுக்கொண்டார். 1962 ஆம் ஆண்டில் இலங்கை கவச வாகனங்களின் 1வது உளவுத்துறை படைப்பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆக ஆணையதிக்காரம் அளிக்கப்பட்டார்.

லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ அவர்கள் வட பகுதியில் இடம் பெற்ற ஆரம்ப கட்ட ஈழப் போர்களுக்கெதிராக இலங்கை இராணுவம் பல வெற்றிகளைப் பெற காரண கருத்தாவாக அமைந்தார். இதனால் அவர் பல வீர பதக்கங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைக்கு இராணுவச் செயற்பாடு தொடர்பில் சென்றிருந்தவேளை பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்நிகழ்வில் திருமதி. லலி கொப்பேகடுவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அசங்க அபேகுணசேகர, முன்னாள் தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயிலுனர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்