››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

[2017/12/10]

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சிப் பிராந்தியத்தை சேர்ந்த தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு தொகை கல்வி உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய, கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகம் துணுக்காய் தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வியாழக்கிழமை (டிசம்பர், 07) அன்பளிப்பு செய்துள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்நிகழ்வில் பயிற்சி கொப்பிகள், பாடசாலை பைகள், காலணிகள் உள்ளிட்ட சுமார் 250,000.00 ரூபாய் பெறுமதியான ஒரு தொகை பாடசாலை உபகரணங்கள் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தை சேர்ந்த 91 மாணவர்களுக்கு நன்கொடையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 65ஆவது படைப்பிரிவின் பிரதான கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்த்தன அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு திரு நீள் வீரசிங்க அவர்களால் இந் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாடசாலையில் இடம்பெற்ற சிறு வைபவத்தின்போது பாடசாலையின் புனர்நிர்மானப்பணிகளுக்காக 100,000.00 ரூபாய் நிதியுதவியும் குறித்த நன்கொடையாளியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மேஜர் ஜெனரல் சரத் வீரவர்த்தன, திரு நீள் வீரசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்