››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உலர் வலய கிரம்மத்திற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அன்பளிப்பு

உலர் வலய கிராமத்திற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அன்பளிப்பு

[2017/12/12]

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் புல் எளிய பிரதேசத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சனிக்கிழமை (டிசம்பர்,09) இடம்பெற்ற வைபவத்தின் போது பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டது. குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையம் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நலன்புரி செயற்பாடுகளின் ஒரு அங்கமாக மதவாச்சி பிரதேசத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமம் ஒன்றிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இந்நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இக்கிராம மக்கள் சுத்தமான சுத்தமான குடிநீரினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். அநுராதபுர பிராந்தியம் உள்ளிட்ட இலங்கையின் உலர் வலயத்தின் பல பகுதிகள் நீண்ட காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகரித்துவரும் தொற்றா நோய் அச்சுறுத்தலை தவிர்க்கும் ஒரு நடவடிக்கையாக, ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைவாக சிறுநீரக நோய்களை தடுக்கும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. இச்செயலணி சிறுநீரக நோய்கள் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தி வருவதுடன் சிறுநீரக நோய்களை தடுக்கும் செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பவற்றையும் செயற்படுத்தி வருகின்றது.

இந்நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பாவனைக்கென கையளிக்கும் வைபவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சந்த்ராரத்ன பல்லேகம அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்