››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நல்லிணக்கத்தில் இளைஞர்களின் வகிபாகம் மாநாடு ஆரம்பம்

நல்லிணக்கத்தில் இளைஞர்களின் வகிபாகம் மாநாடு ஆரம்பம்

[2017/12/12]

நல்லிணக்கத்தில் இளைஞர்களின் வகிபாகம் எனும் தலைப்பில் இன்று (டிசம்பர், 12) காலை கொழும்பு 07 இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஒரு நாள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார். "சமாதானம், மரியாதை, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக அனைவரும் ஒன்றினைவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இம்மாநாட்டினை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இம் மாநாட்டின் அங்குரார்ப்பண அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஏஎச்எம்.பௌசி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஆரம்ப உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், நாளய தலைவர்களான இன்றைய இளைஞர்கள் எதிர்கால உலகிற்கான சமாதான செய்தியை சுமந்து செல்வதுடன் இன்று நாம் அடைந்துள்ள சமாதானத்தை நிலையாக அமைத்துக்கொள்ள உதவியாக அமைய வேண்டும் எனவும் போரின் அழிவு மிகப்பெரியதாக இருந்ததுடன், அது நமது நாட்டின் பல இளைஞர்களை எடுத்துக் கொண்டது, எனவே இந்த மக்கள்தொகை என்பது அர்த்தமுள்ள மற்றும் நீடித்த சமாதானத்தை உருவாக்குவதற்குறிய கவசத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி அவர், அது எமது இளைய தலைமுறையினர் மத்தியில் பல்லின சமுதாயங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக செயற்படவும், கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் மற்றும் கலந்துரையாடல்கள் ஊடாக அவர்களது வேற்றுமைகளை தீர்த்துக்கொள்ளவதற்கு கல்வி ஒரு மிகமுக்கியமான விடயமாக திகழ்வதுடன் வன்முறைகள் இவற்றுக்கான தீர்வு அல்ல என்றும் அவர் குறிபிட்டார்.

மேலும், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அரசின் அர்ப்பணிப்புக்களை எடுத்துரைக்கும் போது, ஜனாதிபதி அவர்கள் தாய்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் இங்கு சுட்டிகாட்டினார்.

இந்நிகழ்வில், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர், திரு. வீ சிவஞானஜோதி, தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அசங்க அபேகுனசேகர, இராஜதந்திரிகள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்