››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

[2017/12/13]

பட்டலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேற்போர் கூடத்தில் இன்று (டிசம்பர். 13) இடம்பெற்ற 11வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன, மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 11வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 65 அதிகாரிகளும், கடற்படையைச் சேர்ந்த 23 அதிகாரிகளும் விமானப்படைச் சேர்ந்த 26 அதிகாரிகளும் பங்களாதேஷைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ருவாண்டா, சூடான், அமெரிக்கா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரியும் தமது கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்து பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான தமது msc பட்டத்தினை பெற்றுக்கொள்கின்றனர். இவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வுகள் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிறந்த ஆய்வுக் கட்டுரைக்காக கோல்டன் பென் விருது Wg Cdr HMLS லங்காதிலக அவர்களுக்கு வழங்கப்பட்டது. 11ஆவது பாடநெறியின் மிகச்சிறந்த செயல்திறனுக்கான கோல்டன் ஆவ்ல் விருது(ARMY WING) மேஜர் கே.எஸ்.ஆர்.பீ. குணதிலக்க (NAVY WING) லெப்டினன்ட் கமாண்டர் JHCH ரணவீர மற்றும் (AIR WING) Wg Cdr HMLS லங்காதிலக அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதேவேளை, வெளிநாட்டு மாணவர்களில் மிகச்சிறந்த செயல்திறனுக்கான விருது நேபாள நாட்டைச்சேர்ந்த (Army Wing) மேஜர் பி.கே. காட்கா மற்றும் பங்களாதேச நாட்டைச்சேர்ந்த தளபதி எம்.எம். ரஹ்மான் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

முன்னர் இருந்த இராணுவ கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியானது 1998ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டது. இராணுவ கோட்பாடு மற்றும் மூலோபாய நிலையை கற்பிப்பதன் ஊடாக முப்படையினரின் சேவைகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும்வகையில் 2007ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இம்மாற்றம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், அமைச்சின் அதிகாரிகள் வெளிநாட்டு அதிதிகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்