››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சேவா வனிதா பிரிவினால் பரிசுப்பொதிகளை வழங்கி வைப்பு

கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சேவா வனிதா பிரிவினால் பரிசுப்பொதிகளை வழங்கி வைப்பு

[2017/12/14]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசுப்பொதிகளை வழங்கிவைக்கும் வகையில் ஏற்பாடுசெய்திருந்த விஷேட நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (டிசம்பர், 14) இடம்பெற்றது.

இந் நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்வு, அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளது கல்வி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்களின் தலைமையில் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இங்கு உரைநிகழ்த்திய செயலாளர் அவர்கள், பிள்ளைகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்த உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நலன்புரிசேவைக்காக சேவா வனிதா பிரிவின் முயற்சிகளை பாராட்டியதுடன், நன்றாக படித்து சிறந்த குடிமக்களாக திகழ வேண்டும் என்றும் ஊழியர்களின் பிள்ளைகளிடத்தில் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின்போது, அடையாளபூர்வமாக 50 பிள்ளைகளுக்கான பரிசுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு பொதிகளிலும் பயிற்சி கொப்பிகள், ஒரு சோடி காலணி மற்றும் ஒரு பாடசாலைப்பை ஆகியன உள்ளடங்கலாக சுமார் 900, 000.00 ரூபாய் பெறுமதியான பொதிகள் இங்கு பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் மத்தியில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியாரத்ன, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சேவா வனிதா அதிகாரிகள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் பலரும் கொண்டனர்.

புதிய தலைவியின் பொறுப்பின் கீழ் சேவா வனிதா பிரிவு எதிவரும் காலங்களில் பல்வேறு நலன்புரி சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அமைச்சின் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவும் வகையிலான நலன்புரி திட்டங்கள் தவிர்ந்த, பொது இடங்களான மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இப்பிரிவினால் யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீட்டுக்கடன் வழங்கப்படுவதுடன், அவர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்