››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கனிஷ்ட மாணவ சிப்பாய்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

கனிஷ்ட மாணவ சிப்பாய்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/12/16]

 

மேல் மாகாணத்திற்கான கனிஷ்ட மாணவ சிப்பாய்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு வைபவம் நேற்று மாலை (டிசம்பர்,15) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேல் மாகாண கனிஷ்ட மாணவ சிப்பாய்களுக்காக தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியினரால் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை வேயங்கொட சியன தேசிய கல்வியியல் கல்லூரியில் நடாத்தாப்பட்ட பயிற்சி முகாமில் சுமார் 500 கனிஷ்ட மாணவ சிப்பாய்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட மாணவ சிப்பாய்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் சான்றிதழ்கள் வளங்கிவைக்கப்பட்டன.

அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு கனிஷ்ட மாணவ சிப்பாய்கள் ஆக பயிற்சியளிக்கப்படுகின்றன. அவர்களுக்கான பயிற்சி தொகுதி உடற்பயிற்சி, வரைபட வாசிப்பு, முதல் உதவி, அணிவகுப்பு பயிற்சி, தந்திரோபாயங்கள், மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியது. மேலும் அவர்களுக்கு தலைமைத்துவ குணங்கள், தன்னம்பிக்கை மற்றும் குழுவாக பணி செய்தல் ஆகியன தொடர்பாகவும் பயிற்சியளிக்கப்படும்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்