››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சில் புத்தாண்டு நிகழ்வுகள்

பாதுகாப்பு அமைச்சில் புத்தாண்டு நிகழ்வுகள்

[2018/01/02]

புத்தாண்டினை வரவேற்கும் வைபவ ரீதியான ஆரம்ப செயற்பாட்டு நிகழ்வுகள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி, 02) இடம்பெற்றது. இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்வு, அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமானது. இதனைத்தொடர்ந்து செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகளினால் சத்திய பிரமாணமும் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், அர்ப்பணிப்புடன் தமது வேலைகளை செய்யும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தத்துடன், ஜனாதிபதியினால் இவ்வாண்டு (2018) உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார். அத்துடன், நாம் சிவில் சேவையாளர்கள் என்றவகையில் நாட்டின் தேசிய இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் கூறினார். அத்துடன் வெற்றிகரமான மற்றும் வளமான ஆண்டுக்கான தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலு, செயலாளர் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர அவர்களுடன் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்றுண்டி விருந்துபசார நிகழ்வில் இணைந்து கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், மேலதிக செயலாளர்கள், கடற்படை தளபதி, கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர், இராணுவ இணைப்பு அதிகாரி, அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்