››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விமானப்படை வீரர்கள் தேசிய பளு தூக்கும் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்

விமானப்படை வீரர்கள் தேசிய பளு தூக்கும் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்

[2018/01/04]

அண்மையில் இடம்பெற்ற தேசிய பளு தூக்கும் போட்டியில் இலங்கை விமானப்படையின் பளு தூக்கும் வீரர்கள் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளுக்குமான ஒவரோல் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வெற்றி கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளுக்குமாக இடம்பெற்ற வெவ்வேறு போட்டிகளில் விமானப்படை பளு தூக்கும் வீரர்கள் கலந்துகொண்டு குறித்த பட்டத்தினை வெற்றிகொண்டதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிகள் யாவும் கொழும்பு டொரிங்டன் ஜிம்னாஸ்டிக் கூடத்தில் டிசம்பர் மாதம் 26ம் திகதி முதல் 29ம் திகதிவரை இடம்பெற்றது. இதன்போது சிரேஷ்ட ஆண்களுக்கான பளு தூக்குதல் போட்டி, சிரேஷ்ட பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டி, கனிஷ்ட ஆண்களுக்கான பளு தூக்குதல் போட்டி ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்