››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளை சேர்ந்த சுமார் எழுநூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை யாழ் தலைமையகத்தை சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் அன்பளிப்பு செய்துள்ளனர்.

வடமாகான மாணவர்களின் கல்விக்கான உதவி

[2018/01/05]

யாழ் மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளை சேர்ந்த சுமார் எழுநூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை யாழ் தலைமையகத்தை சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் அன்பளிப்பு செய்துள்ளனர். இதன்பிரகாரம், முத்துத்தம்பி மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம், கொண்டவில் பரமஜோதி வித்யாலயாம் மற்றும் யாழ்ப்பாணம் கொக்குவில் நிலைய சி.சி.எம்.டீ வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 724 மாணவர்கள் மத்தியில் சுமார் 1,000.00 ரூபாய் பெறுமதியான பரிசுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (ஜனவரி, 04) இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளின்போது இப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், இதற்கான அனுசரணையினை நற்குணத்திற்கான அமைப்பு வழங்கியுள்ளது.

இதேவேளை, வவுனியாவின் போகஸ்வெவா மற்றும் சேலலிகினிகம ஆகிய கிராமங்களிலுள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுப்பொதிகள் என்பவற்றை வன்னி பாதுகாப்பு படை தலைமையகம் ஹேமாஸ் குரூப்பினுடைய ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்புடன் இணைந்து இதனை வழங்கியுள்ளன.

இந்நிகழ்வில், நன்கொடை நிறுவன பிரதிநிதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்