››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் மாலி பயணம்

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் மாலி பயணம்

[2018/01/10]

மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் இலங்கையிலிருந்து நேற்று (ஜனவரி, 09) புறப்பட்டு சென்றுள்ளனர். 18 உறுப்பினர்களைக்கொண்ட இக்குழுவினர், ஐக்கிய நாடுகள் பலபரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் பணிக்காக தமது பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று மாலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை இராணுவத்தின் முதற்குழுவினர் கடந்த வருடம் (2017) டிசம்பர் மாதம் 24ஆம் திகதி புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த பணிக்காக 10 படை பிரிவுகளைச்சேர்ந்த 200 இராணுவ வீரர்கள் ஒருவருட கால சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இராணுவ வீரர்கள் மிகவிரைவில் இலங்கையிலிருந்து மாலி நாட்டின் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக பயணிக்க உள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்