››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி இலங்கை விஜஜம்

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி இலங்கை விஜயம்

[2018/01/15]

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா அவர்கள் நேற்று (ஜனவரி, 15) இலங்கை வந்துள்ளார். இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பினை ஏற்று மூன்று நாள் விஜயமொன்ரை மேற்கொண்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா அவர்களின் இம்மூன்று நாள் விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், இராணுவ அதிகாரிகளின் பிரதானி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கமர் ஜாவேத் பஜ்வா, நிஷான்-ஐ -இம்தியாஸ் (இராணுவம்) அவர்கள் 1960ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி கராச்சியில் பிறந்தார். இவர் 1980ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி பலோச் ரெஜிமென்ட் (காலாட்படையணி) அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக நியமனம்பெற்றார். இவர் கனடா டொரன்டோவிலுள்ள இராணுவ கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.த்துடன் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் போர் கலையில் தொடர்பான கற்கையினையும் நிறைவு செய்து மாஸ்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கான இராணுவ பதவி நிலைப் பிரதானியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்