››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வட பிராந்திய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் உதவி

வட பிராந்திய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் உதவி

[2018/01/21]

 

சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பருத்தித்துறை ஆகிய கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (ஜனவரி, 19) நாகவிகாரை வளாகத்தில் இடம்பெற்றது.

யாழ் குடா நாட்டில் நல்லிணக்கத்த்திற்கு வலுச் சேர்க்கும் நோக்கில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகம், கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நிப்பன் கல்வி மற்றும் கலாசார நிலையத்துடன் (SLNECC) இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்தது. இதன்போது சுமார் 50ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் ' கெபகரு மபிய' புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தரம் 9 முதல் நிதி புலமைப்பரிசில்களும் அளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வண. மீகஹதன்ன சந்திரஸ்ரீ நாயக்க தேரர், இலங்கை நிப்பன் கல்வி மற்றும் கலாசார நிலையத்தின் பொதுச்செயலாளர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்