››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியினர் “சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்” பட்டத்தை வென்றுள்ளனர்.

பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியினர் “சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்” பட்டத்தை வென்றுள்ளனர்.

[2018/01/25]

அண்மையில் கொழும்பு ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்ற ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தமது எதிரணியினரை தோற்கடித்து “சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்” பட்டத்தை வென்றுள்ளனர்.

சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதிச்சுற்றுப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி, 21) நிறைவுற்றதுடன், பாதுகாப்பு சேவைகள் ஆண்கள் ஹொக்கி அணியினர் அரச சேவைகள் ஹொக்கி அணியினரை 5க்கு 0 என்ற புள்ளி அடிப்படையிலும், பாதுகாப்பு சேவைகள் பெண்கள் ஹொக்கி அணியினர் கொழும்பு ஹொக்கி கழகத்தை 6க்கு 0 என்ற புள்ளி அடிப்படையிலும் வெற்றியீட்டியுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெறிவிக்கின்றன.

இலங்கை விளையாட்டு அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்பட்ட குறித்த போட்டி இம்மாதம் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இடம்பெற்றதுடன், இப்போட்டியில் பதினெட்டு ஆண் மற்றும் பத்து பெண் வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்