››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் குடும்பகளுக்கான ஊக்குவிப்பு நிகழ்வுகள்

யாழ் குடும்பகளுக்கான ஊக்குவிப்பு நிகழ்வுகள்

[2018/02/09]

இலங்கை இராணுவத்தின் 7ஆவது மகளிர்ப் படையணியின் வீராங்கனைகளால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கான நலன்புரித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக பொருளாதார திட்டத்தின் கீழ் இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வைபவம் அரியாலை பிரதேசத சர்வோதய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை இராணுவத்தின் மகளிர்ப் படையணியின் வீராங்கனைகளால் குறித்த இந் நிகழ்வில் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 வறிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கான பால்மா பக்கற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வானது வடபிராந்திய வறிய மக்களுக்காக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற சமூக நலன்புரி திட்டங்களில் ஒன்றாகும். மேலும், பொதுப்பரீட்சைகளை எதிர்நோக்குகின்ற மாணவர்களுக்காக இலவச கருத்தரங்குகளை நடாத்தல், வறிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைத்தல், மருத்துவ முகாம்களை முன்னெடுத்தல், அரச மற்றும் பொது இடங்களில் சிரமதான நிகழ்வினை முன்னெடுப்பதான் மூலம் யாழ் குட மற்றும் அண்மைய பிராந்தியத்தில் சுகாதார தரத்தினை உறுதிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வட பகுதியில் உள்ள அரச வைத்தியசாலைகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்