››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

படை வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புக்கான உதவி

படை வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புக்கான உதவி

[2018/02/16]

அண்மையில் (பெப்ரவரி, 13) இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவினை சேர்ந்த யுத்த வீரர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு சாலியபுர கஜபா படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கஜபா படைப்பிரிவின் “கஜபா விறு சவிய -2018” எனும் திட்டத்தின்கீழ் குறித்த கல்வி ஊக்குவிப்புக்கான நிதி வழங்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரம் ஐந்து புலமைப்பரீட்சை, (க பொ த) சாதாரணதரம் ஆகிய பரீட்சைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மற்றும் பல்கலைக்கழகம் தெரிவாகிய, அங்கவீனமுற்ற மற்றும் மருத்துவ ரீதியாக தகுதியற்ற படை வீரர்களது 50 பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புக்கான புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், தரம் 5 பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபாய் 1500 /= படி ஒரு வருடத்திற்கும், (க பொ த) சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபாய் 1500 /= படி இரு வருடத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபாய் 5000 /= படி மூன்று வருடத்திற்கு இக்கொடுப்பணவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், யுத்த வீரர்களின் குடும்பத்தை சேர்ந்த 500 பிள்ளைகளுக்கு சுமார் 3000.00 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளும் இந்நிகழ்வின்போது வழங்கப்பட்டன. யுத்த வீரர்களின் பிள்ளைகளது கல்வி அபிவிருத்திக்காக வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு கஜபா படைப்பிரிவின் சேவா வனிதா பிரிவு மாற்றம் நலன்விரும்பிகள் ஆகியோர் அனுசரணை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வில், கஜபா படைப்பிரிவின் கேணல், மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் எஜுடன் ஜெனரல், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்