››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

300 கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் அளிப்பு

[2018/02/20]

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகம் அப்பிராந்திய சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை உயர்த்தும் மற்றுமொரு திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். வட மாகாண கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 சிறார்களுக்கு கல்வி உதவிகள் அளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வு அண்மையில் கிளிநொச்சி நெலும் பியச கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

கொழும்பு, மக்கள் வங்கியின் பௌத்த சங்க அனுசரனையுடன் இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன. இவ்வன்பளிப்பு பொதியில் பயிற்சி கொப்பிகள், கணித உபகரணங்கள், பாலசாலை பேக், காலணிகள் என்பன உள்ளடங்கியிருந்தன. இதற்கு மேலதிகமாக அவர்களுக்கு 'சிசு உதான' சேமிப்புக்கணக்கு என்பன ஆரம்பிக்கபட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இச்சேமிப்பு கணக்கு புத்தகம் கிளிநொச்சி தனவந்தர் ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்