››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காணாமல் போன பல்கலைக்கழக மாணவர்ளை தேடும் பணியில் படையினர்கள்

காணாமல் போன பல்கலைக்கழக மாணவர்ளை தேடும் பணியில் படையினர்கள்

[2018/03/01]

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பம்பரகந்த பிதேசத்திலுள்ள வங்கெடிகந்த மலைப்பிரதேசத்தில் வழிமாறிப் பயணித்து காணாமல் போன தனியார் பல்கலைக்கழக மாணவர்களை தேடும் பணிகளில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 பேரை கொண்ட இராணுவ குழுவினர்களால் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இவர்களை தேடும் நடவடிக்கையானது. (28) ஆம் திகதி புதன்கிழமை இராணுவமீட்புகுழுவினர்களால்மேற்கொள்ளப்பட்டன.

மேலும் சுற்றுப் பயணத்தின் போது மலை வீழிச்சியின் கீழ் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நிலவிய அதிக பனீமூட்ட மழை காலநிலை காரணமாக இவர்கள் மோசமாக பாதிக்கப்ட்டுள்ளதாகவும் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த மீட்புநடவடிக்கையானது ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனையின் கீழ் 11 பேர்கள் கொண்ட மீட்பு பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்ட குழுவினர்களால் மலைப்பிரதேசத்தில் அடர்ந்த காடுகளில் பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகள் மற்றும் மழை குளிர் காலநிலை மற்றும் இருள் போன்ற பிரதேசங்களில் தங்கள் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

எனினும், (28)ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை நேரத்தில் மத்திய பாதுகாப்பு படைத் இராணுவ மீட்பு குழுவினர் மலைப்பாறை காடுகளில்வழிமாறிப் பயணித்த பாதிக்கப்பட்ட சரியான இடத்தை கண்டுபிடித்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனையின் கீழ் 11 பேர்கள் கொண்ட மீட்பு பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்ட குழுவினர்களால் ஐந்து மணி நேரம் நீடித்த தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்தது.

மீட்பு குழுவினர்களால் கண்டுபிடித்த பிறகு (28)ஆம் திகதி புதன்கிழமை காலை ஹல்துமுல்ல பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனவர்களை ஒப்படைத்தன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஹல்துமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு காலை 10.30 மணியலவில் ஒப்படைக்கப்பட்டன.

நன்றி_இராணுவ செய்திப்பிரிவு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்