››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மிலன் 2018இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்கள் பயணம்

மிலன் 2018இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்கள் பயணம்

[2018/03/03]

இலங்கை கடற்படையின் சமுத்ரா மற்றும் சுரனிமல எனும் இரு கப்பல்கள் மிலன் - 2018 பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா நோக்கி நேற்றையதினம் (பெப்ரவரி, ௦2) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றன. இவ்விரண்டு கப்பல்களும் இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை துறைமுகத்திலிருந்து அந்தமான் தீவின் பிளையர் துறைமுகத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பயிற்சியில் கலந்துகொள்வதற்காக ஆறு கடற்படை பயிலுனர் அதிகாரிகள் மற்றும் 27 கடற்படை அதிகாரிகள் உட்பட 284 கடற்படை வீரர்கள் கப்பல்களுடன் பயணித்துள்ளார்கள்.

மிலன் என அறியப்படும் இக்கடற்படை பயிற்சி இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

குறித்த கடற்படைகளுக்கிடையிலான பயிற்சிகள் அந்தமான் தீவின் பிளையர் இம்மாதம் 06ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது. "கடல் முழுவதும் நட்பு" எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான மிலன் - 2018 பயிற்சிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்