››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படை "டட்டூ” கண்காட்சி செயலாளர் அவர்களால் திறந்து வைப்பு.

இலங்கை விமானப்படை "டட்டூ” கண்காட்சி செயலாளர் அவர்களால் திறந்து வைப்பு.

[2018/03/03]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த "டட்டூ” கண்காட்சியினை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (மார்ச், 03) கோலாகலமாக திறந்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இம்மாதம் 03 ஆம் திகதிலிருந்து 05 ஆம் திகதி வரை அம்பாறை விமானப்படை தளத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த செயலாளர் அவர்களை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வரவேற்றுள்ளார். மூன்று நாள் கொண்ட இக்கண்காட்சியை செயலாளர் அவர்கள் திறந்துவைத்த பின்னர் அங்குள்ள பல்வேறு காட்சிகளையும் பார்வையிட்டார்.

“டட்டூ” காட்சியானது, இலங்கை விமானப்படையின் இராணுவ திறமை, ஆளுமை மற்றும் பல்வகைப்பட்ட விமான வளங்கள் ஆகியவற்றை காண்பிக்கும் வகையில் இடம்பெறுகிறது.

இக் கண்காட்சி இம்மாதம் 03 ஆம் திகதிலிருந்து 05 ஆம் திகதி வரை அம்பாறை விமானப்படை தளத்தில் இடம்பெற்று வருவதுடன், விமானம் பறக்கும் காட்சிகள், பரசூட் காட்சிகள், கலாச்சார, ரில் காட்சிகள், பான்ட் வாத்திய காட்சிகள் ஆகியன இதன்போது இடம்பெற உள்ளது. அத்துடன், இந்நிகழ்வினை மாலை இரண்டு மணி முதல் பதினோரு மணிவரை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

இந்நிகழ்வில், சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான இலங்கை விமானப்படை வீரர்களும் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்