››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடலோர காவற்படை 8ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடுகிறது.

இலங்கை கடலோர காவற்படை 8ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடுகிறது.

[2018/03/05]

 

இலங்கை கடலோர காவற்படை தனது 8ஆவது ஆண்டு நிறைவினை நேற்று (மார்ச், 04) கொண்டாடியுள்ளது.

இதற்கமைய, 2009 ஜூலை 09 ஆம் திகதி கடலோர காவல்படைத் திணைக்களத்தினை இணைப்பதற்கு 2009 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க கடலோர காவற்படை சட்டமூலம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு, 4ஆம் திகதி மார்ச் 2010ஆம் ஆண்டு அதன் நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையானது கடற்பிராந்தியத்தில் சட்ட அமுலாக்க்கள் நிறுவனமாக செயற்பட்டு வருகிறது. மேலும் இலங்கை கடற்பிராந்தியத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல்கள், வள்ளங்கள் மற்றும் நபார்களை தேடுதல் மற்றும் கைது செய்து குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளும் அதிக்கரம் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோர பாதுகாப்பு படை ஆண்டு நிறைவை முன்னிட்டு வெலிகம மிரிஸ்ஸ இலுள்ள அதன் தலைமையாகத்தில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்