››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வட பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி

வட பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி

[2018/03/06]

அண்மையில் (மார்ச், 04) இலங்கை கடற்படை வடமாகன்த்தின் காங்கேசன்துறை பகுதியில் கள மருத்துவ சிகிச்சை ஒன்றினை நடாத்தியுள்ளனர். குறித்த சிகிச்சை நிகழ்வானது, காங்கேசன்துறை மாவடிபுர மாதிரிக்கிராமத்தில் புதிதாக குடியமர்த்தப்பட்டவர்கள் நன்மை அடையும் வகையில் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் பொதுமக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட இச்சமூக நலன்புரி திட்டங்களில் பெரும் தொகையான மக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், சிறுவர் சுகாதார பிரச்சினைகள், வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கடுமையான நோய்கள், மற்றும் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இதன்போது சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கான மருந்துகள் மற்றும் சத்துணவு விநியோகம் என்பன இலங்கை திரிபோஷா நிறுவனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகிவற்றின் அனுசரணையின் கீழ் இடம்பெற்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்