››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படையின் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

இலங்கை விமானப்படையின் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

[2018/03/07]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “எயார் டட்டூ” விமானப்படை கண்காட்சி நிகழ்வுகள் யாவும் இம்மாதம் 05 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுபெற்றன. அம்பாறை விமானப்படை தளத்தில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட இக்கண்காட்சி நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்,

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை கடந்த 02ம் திகதி (மார்ச்) கொண்டாடியது.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படை, 'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' சைக்கிலோட்டப்போட்டியினை கடந்த ஞாயிறன்று ஏற்பாடு செய்தது. இப்போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தினை இலங்கை விமானப்படையின் மதுஷங்க பெர்னாண்டோ வெற்றி பெற்ற அதேவேளை விமானப்படை அணி வெற்றியீட்டிய கூட்டு அணியாக தெரிவாகியதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று கட்டங்களாக இடம்பெற்ற 447.4 கி.மீ. போட்டித்தூரத்தை கொண்ட போட்டி கொழும்பில் ஆரம்பித்து அம்பாறையில் நிறைவு பெற்றது. 65.2 கி.மீ போட்டி தூரத்தைக்கொண்ட பெண்களுக்கான சைக்கிளோட்டப்போட்டி நிகழ்வு மட்டக்களப்பில் இருந்து அம்பாறை வரை இடம்பெற்றது

இதேவேளை, இலங்கை விமானப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாறை மகா வித்தியாலயத்தின் புதிய கோட்போர் கூடம் சனிக்கிழமை (மார்ச் 03) திறந்துவைக்கப்பட்டது. குறித்த இத் திட்டம் அம்பாறை விமானப்படை தளத்தின் நலன்புரி நிதியத்தின் நிதியுதவியினைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது.

புதிய கோட்போர் கூடத்தினை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி வைபவ ரீதியாக திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்