››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் செயலாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளருடனான சந்திப்பு

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் செயலாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளருடனான சந்திப்பு

[2018/03/09]

இலங்கைக்கு வருகைதந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் செயலாளர் நாயகம் திரு. ஜெப்ரி பெல்ட்மன் பாதுகாப்பு செயலாளர் (ஜனாதிபதி சட்டத்தரணி) கபில வைத்தியரத்ன அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (மார்ச், 09) சந்தித்துள்ளார்.

இதன்போது, தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் உட்பட காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,, நல்லிணக்க முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடார்பாகவும் திரு. பெல்ட்மன் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திரு. பெல்ட்மன் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, செயலாளர் நாயகம் ஜெப்ரி அவர்களுடன், ஆசியா மற்றும் பசிபிக் தலைவர், திருமதி மாரி யமாஷிதா, அமெரிக்க இலங்கை ஆகிய நாடுகளுக்கான நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி ஆலோசகர், திருமதி கீதா சபர்வால் மற்றும் யூ எஸ் டி, டி.பி.ஏ. செயலாளர், திருமதி மாறி சாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2012 ஜூலை 02 ஆம் திகதி திரு. ஜெப்ரி பெல்ட்மன் அவர்கள் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் செயலாளர் நாயகம் பதவியை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், அமைச்சின் சிரேஷ்ட மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்