››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

[2018/03/19]

கிளிநொச்சிப் பகுதியில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை இராணுவத்தினர் துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்துள்ளனர். அண்மையில் (மார்ச், 14) கிளநொச்சி ஒற்றுமை மையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 25 மாணவர்களுக்கு இவ்வாறு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பிரதேசத்தின் தூர இடங்களில் தங்கள் வீடுகளில் இருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் இராணுவத்தினர் நீர்கொழும்பு ஓரியன்ட் லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்போடு இதனை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிகழ்வில், கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, லயன்ஸ் கழக பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்