››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள்

பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள்

[2018/04/05]

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு நாள் புதுவருட விஷேட சந்தையினை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் இன்று காலை (ஏப்ரல், 05) திறந்துவைத்தார்.

எதிர்வரும் புதுவருடதினத்தினை முன்னிட்டு அமைச்சில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் நலன்கருதி முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியோரினால் அமைக்கப்பட்ட இவ்விஷேட சந்தையில் மரக்கறிவகைகள், உலருணவுப்பொருட்கள், பாலுட்பத்திப்பொருட்கள், ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

புதுவடுட விஷேட சந்தையில் கலந்துகொள்வதற்காக சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் அதன் பிரதிநிதிகள், அமைச்சில் சேவையாற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகைதந்தனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்