››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பனாகொட இராணுவ முகாமில் 'பக்மஹா உழல நிகழ்வுகள்”

பனாகொட இராணுவ முகாமில் 'பக்மஹா உழல நிகழ்வுகள்”

[2018/04/11]

 

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் வருகையினை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டு மற்றும் 'பக்மஹா உழல நிகழ்வுகள் அண்மையில் (ஏப்ரல், 10) பனாகொட இராணுவ முகாமில் நடைபெற்றது. இதேவேளை, பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு எதிர்வரும் சனிக்கிழமை (ஏப்ரல், 14) நிகழ உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பீரங்கிப்படை மைதானத்தில் முழுநாளும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் தலைமையில் இடம்பெற்ற “பக்மஹா உழல -2018” நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் சுமார் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் கலந்துகொண்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, ரப்பான் அடித்தல், கயிறு இழுத்தல், தலையணை சண்டை, கிரீஸ் மரம் ஏறுதல், 'அவ்ருது குமாரி' (புத்தாண்டு இளவரசி) மற்றும் 'அவருது குமாரயா' (புத்தாண்டு இளவரசர்) தெரிவுசெய்தல், யானைக்கு கண் வைத்தல், பணிஸ் உண்ணுதல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மரதன் ஓட்டம், வினோத உடை போட்டி மற்றும் தடை தாண்டி ஓட்டம் ஆகிய பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இங்கு இடம்பெற்றன.

போட்டியில் கலந்து வெற்றி ஈட்டிய வீரர்களுக்கு இராணுவத்தளபதி அவர்களால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான அதிகாரிகள், இராணுவ வீரர்கள், சிவில் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்